சச்சின் கூறிய அளவிற்கு அவரிடம் ஒன்னும் கிடையாது. அவர் நார்மல் தான் – ஸ்டீவ் வாக் நக்கல் பேச்சு

Steve-Waugh
- Advertisement -

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷானே அற்புதமாக தன்னைப்போலவே ஆடுகிறார் என்று சச்சின் டெண்டுல்கர் வியந்து கூறியிருந்தார். மேலும், அவர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் அடி வாங்கிய அடுத்த, 15 நிமிடம் அற்புதமாக ஆடினார் என்று கூறியிருந்தார் சச்சின் டெண்டுல்கர். இந்த ஆட்டம் தன்னை நினைவுபடுத்தியது எனவும் கூறியிருந்தார்.

Marnus

- Advertisement -

இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், அவரது கருத்தை பெரிதாக பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது :

லபுஷானின் ஆட்டத்தையும், உற்சாகத்தையும் தணிப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் அவ்வாறு கூறியிருப்பார். சச்சின் டெண்டுல்கர் கூறியதைப் போல் அவரிடம் ஆட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவரது பொறுமை மற்றும் ஆட்டத்தை எவ்வாறு கொண்டு செல்கிறார் என்பது குறித்து வேண்டுமானால் சச்சின் அவ்வாறு கூறி இருக்கலாம்.

அவரிடம் ரன் பசி இருக்கிறது, கடினமாக முயற்சிக்கிறார். ஆஷஸ் தொடரில் ஆடியது என்னை மிகவும் கவர்ந்தது. 12 மாதங்களுக்குள் டெஸ்ட் தரவரிசையில் 4ம் இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்றால் இது மிகப் பெரிய விஷயம் என்று கூறியுள்ளார் ஸ்டீவ் வாக்

Advertisement