Hardik Pandya : இவர் நிச்சயம் சாதிப்பார். இந்திய அணியின் க்ளுஸ்னர் இவர்தான் – ஸ்டீவ் வாக்

50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும்

Steve-Waugh
- Advertisement -

50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கருதப்படுகின்றன.

india

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் பாண்டியா குறித்து கூறியதாவது :

1999 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக க்ளுஸ்னர் எவ்வாறு ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டராக திகழ்ந்தாரோ அதேபோன்று பாண்டியா தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலமும் தனது ஆல்ரவுண்ட் செயல்பாடு மூலமும் இந்திய அணியின் சிறந்த வீரராக திகழ்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

Pandya 1

மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாண்டியா விளையாடிய ஆட்டம் எதிர் அணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் போட்டியை சிறப்பாக முடிக்கும் திறமை அவரிடம் உள்ளது என்று ஸ்டீவ் வாக் கூறினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாண்டியா 27 பந்தில் 48 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement