இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெறத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அப்போது 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட துவங்கியுள்ளது.
அதனாலேயே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின்பும் ரோஹித் சர்மாவை கழற்றிவிட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அந்த நிலையில் சுப்மன் கில் தலைமையில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அத்தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட்வாஸ் தோல்வியை தவிர்த்தது.
ஆல் டைம் கிரேட் பிளேயர்ஸ்:
அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 73 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர். அதனால் தங்களை உலகக் கோப்பைக்கு முன் கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடியும் கொடுத்தனர். இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன் என்று அவர் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் யாரும் தவற விடக்கூடாது என்றும் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி, ரோஹித் சர்மா 2 ஆல் டைம் கிரேட் பிளேயர்கள். குறிப்பாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஆல் டைம் சிறந்த பிளேயர்”
வாக் பாராட்டு:
“அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதை நீங்கள் பார்க்க விரும்பாதீர்கள். கோல்ட் கோஸ்ட் பகுதியில் (இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டி நடைபெற்ற மைதானம்) இருக்கும் ஆஸ்திரேலியா மக்களும் அவர்கள் விளையாடுவதைப் பார்க்க விரும்புவார்கள். ஆனால் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது”
இதையும் படிங்க: 123 ரன்ஸ்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த டீ காக்.. தெ.ஆ பதிலடி
“அதே சமயம் அவர்கள் இந்தியாவுக்காக இப்போதும் விளையாடுகிறார்கள் என்பது சிறப்பான விஷயம். இந்தியா தற்போது நவீன டி20 கிரிக்கெட் அணியாக மாறியுள்ளது. அவர்களுக்காக நிறைய ஆர்வமான வீரர்கள் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு பரிணமித்து வருகிறது. அதற்கு மத்தியில் ஆல் டைம் கிரேட் பிளேயர்கள் விளையாடுவதைப் பார்ப்பது சிறப்பானது. விராட் கோலி தலைமுறையில் ஒரு முறை வரக்கூடிய வீரர். எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புவீர்கள்” என்று கூறினார்.



