- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அகர்கர் நேர்மையா இருக்கனும்.. விராட், ரோஹித் அதை விட நாம பெரியவங்க கிடையாதுன்னு உணரணும்.. ஸ்டீவ் வாக்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற விரும்புகிறார்கள். ஆனால் அப்போது 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியுமா? என்று தேர்வுக்குழு சந்தேகிக்கிறது.

அதனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இருப்பினும் கடைசிப் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றியைப் பெற்று ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்தது.

- Advertisement -

யாரும் பெருசில்ல:

அந்த வெற்றி ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 73* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்கள். அதனால் தங்களை கழற்றி விடத் துடிக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு அவர்கள் பதிலடியும் கொடுத்தார்கள். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றிய விவரங்களை தேர்வுக்குழுவுடன் விராட், ரோஹித் தெளிவாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் ஸ்டீவ் வாக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வீரர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு தனிநபர்களை விட கிரிக்கெட் பெரியது என்பதை உணர வேண்டும். நீங்கள் கிரிக்கெட்டின் மேலே உங்களை வைக்க முடியாது. மற்றொருவர் உங்களது இடத்தை எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் இந்த விளையாட்டு நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்”

- Advertisement -

ஜாம்பவான் அட்வைஸ்:

“நீங்கள் மாற்ற முடியாதவர்கள் கிடையாது. அதனால் நாளின் இறுதியில் தேர்வுக்குழு தலைவர் தேவையான பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும். அதே சமயம் தேர்வுக்குழு தலைவராக நீங்கள் வீரர்களிடம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய உள்ளீடுகளைக் கொடுக்க வேண்டும். வீரர்களை வீரர்களை நெருக்கமாக தொடர்பு கொள்வதில் பயப்பட அவசியமில்லை”

இதையும் படிங்க: வெறும் 2 ரன்ஸ்.. பாகிஸ்தானை டிகே தலைமையில் சாய்த்த இந்திய அணி.. ஹாங்காங் தொடறில் அசத்தல்

“சில சமயங்களில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதால் வீரர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாது. ஒவ்வொரு தலைவரும் வித்தியாசமாக இருப்பார்கள். அகர்கர் வீரர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்தாலும் அவர்களிடம் இடைவெளியில் இருப்பார் என்று நம்புகிறேன். அவர் விராட், ரோஹித் நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? என்ற வகையில் சீனியர் வீரர்களுடன் தொடர்பு கொள்வது முக்கியம். நாளின் இறுதியில் தலைவர் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -