அந்த பந்தை மட்டும் அடிக்கவே முடியல.. பேசாம ரூல்ஸை மாத்துங்க.. புலம்பலுடன் ஐசிசிக்கு ஸ்மித் கோரிக்கை

Steve Smith 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 29ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 279/9 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதமடித்து 103* ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 4* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

முன்னதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் புதிய துவக்க வீரராக விளையாடுகிறார். இதற்கு முன் நான்காவது இடத்தில் களமிறங்கி விராட் கோலிக்கு நிகராக வெற்றிகரமாக செயல்பட்ட அவர் தற்போது துவக்க வீரராக சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ரூல்ஸை மாத்துங்க:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து லெக் சைட் சென்றாலும் ஒய்ட் கொடுக்கப்படாது என்பது விதிமுறையாகும். ஆனால் அதை பயன்படுத்தி ஸ்பின்னர்களைப் போல வேகப்பந்து வீச்சாளர்களும் வேண்டுமென்றே அதிகமாக லெக் சைட் திசையில் பவுன்சர் பந்துகளை வீசுவதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அதனால் அந்த பந்துகளை அடிப்பதற்கு கடினமாக இருப்பதாகவும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

எனவே அந்தப் பந்துகளை ஓரிரு முறைக்கு மேல் வீசும் போது ஒய்ட் கொடுப்பதற்கு ஏதுவாக விதிமுறை கொண்டுவர வேண்டுமென ஐசிசிக்கு ஸ்மித் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சிட்னி மார்னிங் பத்திரிகையில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “நீங்கள் பந்தை லெக் சைட் திசையில் வீசுவதற்கு தகுந்த ஃபீல்டிங்கை செட்டிங் செய்யும் போது விதிமுறையில் லேசான மாற்றத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் உண்மையாக அது போன்ற பந்துகளை பிட்ச்சுக்கு நேராக உங்களால் அடிக்க முடிவதில்லை. எனவே ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்கள் லெக் சைட் திசையில் பந்து வீசுவது போல வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எச்சரிக்கை கொடுத்து பின்னர் ஒய்ட் கொடுக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். டவுன் தி லெக் பகுதியில் நீங்கள் தொடர்ந்து பந்துகளை வீசுகிறீர்கள் என்றால் அது ஸ்பின்னரைப் போலவே இருக்கும்”

இதையும் படிங்க: என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத தருணம் இதுதான்.. ஷிவம் துபே நெகிழ்ச்சி கருத்து – விவரம் இதோ

“எனவே இது போன்ற நேரங்களில் 1 அல்லது 2 பந்துகளை வீச அனுமதிக்கலாம். பின்னர் எச்சரிக்கை கொடுத்து அது போன்ற பந்துகளுக்கு ஒயிட் கொடுக்கலாம். அது போன்ற பந்துகளை வீசும் போது கேட்ச் பிடிப்பதற்கு ஃபீல்டர்கள் இருப்பதால் அதை சந்திப்பது மிகவும் சவாலாக இருப்பது இருக்கிறது. அதனால் பந்து லெஃப்ட் சைட் திசையில் வரும் போது ஃபீல்டர்கள் இருப்பதால் உங்களால் எங்கேயும் அடிக்க முடிவதில்லை. எனவே அதில் நான் மாற்றத்தைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement