சன் ரைஸர்ஸ் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்கள் 2 பேரே காரணம் – ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

srhvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராகுல் திவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ராகுல் திவாதியா தேர்வானார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது : இது ஐபிஎல் டி20. இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படும் உண்மையிலேயே ராகுல் திவ்யா மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

Tewatia

ஒரு இளம் வீரராக இருந்து தனது முதிர்ச்சியை காண்பித்த ரியான் மற்றும் திவாதியாக ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஆடிய அனைத்து ஷாட்களும் சிறப்பாக இருந்தது. ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை இருப்பினும் அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பிவிடுவார். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும் டாப் 4 வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்று கூறியே ஆக வேண்டும்.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்றது மகிழ்ச்சி. டாப் 4 வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்ய ஆரம்பித்தால் இனியும் வரவிருக்கும் போட்டிகள் எங்களுக்கு எளிதாக அமையும். எங்கள் அணி தற்போது நல்ல பலத்துடன் இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலைகளில் ராகுல் திவாதியா சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எங்கள் அணிக்கு அவர் ஒரு மிக முக்கியமான வீரர்.

parag

இனிவரும் காலத்திலும் அவரை நாங்கள் இழக்க விரும்பவில்லை. வருங்காலத்தில் இதே போன்று பல வெற்றிகளை எங்கள் அணிக்கு பெற்றுத்தரும் வீரராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ரியான் பாரக்கும் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் செய்ய எளிதாக இல்லாத பிட்ச்சிலும் சிறப்பாக விளையாடி தனது திறமையை அவர் நிரூபித்துள்ளார் என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement