சி.எஸ்.கே அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் – ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது : ஷார்ஜாவை விட இந்த மைதானத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த மைதானத்தில் பந்துவீசும் போது நன்றாக நின்று வந்தது. இதனால் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சிறப்பானது அல்ல. பந்து வீச்சுக்கு அதிக அளவு ஒத்திவைத்தது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்ற அணியாக இருப்பதில் மகிழ்ச்சி.

- Advertisement -

எங்களது அணி பந்து வீச்சாளர்கள் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக வீசியதாக கருதுகிறேன். ஸ்பின்னர்கள் குட் லென்த் ஏரியாவில் சரியாக வீசினார்கள். அவர்களது கூக்ளி மற்றும் லெக் பிரேக்குகள் சிறப்பாக இருந்தன. அவர்களின் சிறப்பான பந்துவீச்சு சென்னை அணிக்கு அழுத்தம் கொடுத்தது.

rr

திவாதியா மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் எங்கள் அணிக்காக சிறப்பாக பந்துவீசினர். பட்லர் என் மீது இருந்த அழுத்தத்தை நீக்கினார். நான் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருக்க அவர் அவரது வழியில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். நல்ல ஸ்ட்ரைக் ரேட் மெயின்டன் செய்ததால் எங்களால் எளிதாக போட்டியை வெல்ல முடிந்தது என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement