ராகுல் திவாதியா மேல் இருந்த இந்த நம்பிக்கையால் தான் அவரை 4 ஆம் இடத்தில் களமிறக்கினேன் – ஸ்டீவ் ஸ்மித் அதிரடி

Smith-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் குவித்தனர். அடுத்து 224 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றி பெற்றது.

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களையும், ராகுல் திவாதியா 31 பந்துகளில் 53 ரன்களையும் குறித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மூன்று பந்துகளில் மிச்சம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது.

ஒரு கட்டத்தில் முதல் 20 பந்துகளில் கடந்தும் ராகுல் திவாதியாவால் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை ஏன் இந்த இடத்தில் இறக்கினார்கள் என்ற கேள்வியைக் கூட எழுப்பி இருப்பார்கள். ஆனால் ஆட்டத்தை மாற்றிய 18-வது ஓவரில் அவர் ஐந்து சிக்சர்களை பறக்கவிட்டார். அதுமட்டுமின்றி அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்து வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

நேற்றைய போட்டி மொத்தமாக அவரது பேட்டிங்கால் வெற்றிக்கு திரும்பியது என்றால் அது மிகை அல்ல. இந்நிலையில் ராகுல் திவாதியாவை ஏன் உத்தப்பாவிற்கு முன்னதாக அந்த இடத்தில் இறக்கி விட்டார்கள் என்ற காரணத்தை ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் பரிசளிப்பு விழாவின் போது பகிர்ந்து கொண்டார் அது குறித்து அவர் கூறும்போது :

Tewatia-1

நாங்கள் ராகுல் திவாதியாவின் ஹிட்டிங் பவரை வலைப்பயிற்சியில் கண்டுள்ளோம். மிக நீண்ட தூரம் சிக்சர் அடிக்கும் திறமை அவரிடம் இருந்தது. அதனால் அவரை பேட்டிங் ஆர்டரில் சற்று முன்னேற்றி அனுப்பினோம். அதே போன்று அவரும் காட்ரெல் ஓவரில் ஐந்து சிக்சர்களை அடித்து போட்டியை திரும்பவும் எங்கள் பக்கம் திருப்பினார். இறுதியில் வெற்றியும் கிடைத்தது என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement