டாப் ஆர்டரில் இருக்கும் இந்த குறையே பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் – ஸ்மித் புலம்பல்

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் சனிக்கிழமை நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மொத்தமே நான்கு நாட்கள்தான் இரண்டு போட்டிகள் நடைபெறும். நேற்று இரண்டு போட்டிகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை முதல் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விராட் கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த அணியில் வேறு யாரும் நன்றாக ஆடவில்லை. மஹிபால் லாம்ரோர் என்னும் இளம் வீரர் மற்றும் 47 ரன்கள் எடுத்தார். அதனை தாண்டி எந்த ஒரு வீரரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து தட்டுத்தடுமாறி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி.

இதனையடுத்து 155 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர் தேவ்தத் 63 ரன்கள், விராட் கோலி 72 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேசுகையில் : நாங்கள் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அதனை நாங்கள் தவறவிட்டு விட்டோம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம்.

rcb

இதனால் எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போய் விட்டது. இன்றைய போட்டியிலும் ஜாப்ரா ஆர்ச்சர் மிக அருமையாக பந்து வீசினார். தவறுகளை சரி செய்து அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவோம். எங்களது அணியில் மூன்று வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். இவர்கள் அனைவருக்கும் திறமை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.

Advertisement