ஒருத்தர் ஸ்மார்ட், ஒருத்தர் க்ளாஸ் அவங்க ரெண்டு பேரையும் தடுக்க முடியல. அதுவே தோல்விக்கு காரணம் – ஸ்மித் வேதனை

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

srhvsrr

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக இந்தப் போட்டியில் முதன்முதலாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ற ஹைதராபாத் அணி துவக்கத்தில் வார்னர் இஸ்ரோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

- Advertisement -

ஆனால் அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களுடனும், 51 பந்துகளைச் சந்தித்த விஜய் சங்கர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக மணிஷ் பாண்டே தேர்வானார்.

SRH

போட்டி முடிந்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது : போட்டியை நாங்கள் தொடங்கிய விதம் சிறப்பாகவே இருந்தது. ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அதே மூமென்ட்டத்தை எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை. விஜய் சங்கர் ஸ்மார்ட்டான இன்னிங்ஸ் விளையாடினார். மணிஷ் பாண்டே ஆட்டத்தை எங்கேயோ கொண்டு சென்றார். துக்கத்திலேயே இன்னும் ஒரு ஓவரை ஆர்ச்சருக்கு அதிகமாக கொடுத்திருக்கலாம் அது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

- Advertisement -

அப்படி அவர் வீசி இருக்கும் பொழுது இன்னும் ஒரு விக்கெட்டை நாங்கள் பெற்று ஆட்டத்தில் ஒரு மாற்றம் இருந்திருக்கும். இதுகுறித்து நான் மற்ற பந்துவீச்சாளரிடம் ஆலோசனை செய்தேன். மொத்தத்தில் இந்த போட்டி சன் ரைஸர்ஸ் அணியின் வழியிலேயே சென்றது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து நின்று வந்ததால் அவர்கள் அதனை கணித்து ரன்களை சேர்த்து விட்டனர்.

pandey

இந்த தோல்வி குறித்து எந்த ஒரு தவறையும் என்னால் சுட்டிக் காட்ட முடியாது. ஏனெனில் தரமான அணி, தரமான வீரர்கள் என்று இருக்கும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத் தான் செய்யும். இந்த தோல்வியிருந்து பலமாக நாங்கள் மீண்டு வர விரும்புகிறோம். இந்த தொடர் எவ்வாறு முடியும் என்பது சொல்ல முடியாது. இருப்பினும் வெற்றி பெற்று கொண்டே இருக்க வேண்டும் அது மட்டுமே எங்களது வேலை என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement