தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் ஐசிசி ஆஸ்திரேலிய அணி கேப்டனிற்கு 100% அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தது.
பந்தை சேதப்படுத்திய பந்துவீச்சாளரான கேமரூன் பேன்கிராப்ட்க்கு 75% அபராதம் மட்டும் விதித்தது.
இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒரு வருட தடை விதித்தது.இந்நிலையில் நேற்று இரவு ஸ்மித் மற்றும் வார்னர் தென்ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்தனர்.
Watch LIVE: Steve Smith addresses the media after returning home to Sydney https://t.co/ljh0A32bMh
— cricket.com.au (@CricketAus) March 29, 2018
இந்நிலையில் இன்று காலை சிட்னியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஸ்மித் “இது எனது தலைமைக்கு கிடைத்த தோல்வி,நடந்த சம்பவத்திற்கு நான் முழுப்பொறுப்பேற்கின்றேன்.என் மீது அதிருப்தியோடு இருக்கும் என் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மற்றும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் என்று பேசியபடியே கண்ணீர் சிந்தினார்.