ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எளிதாக வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
Sandakan had a golden opportunity to run out Smith! #AUSvSL pic.twitter.com/E7AsOwEjSJ
— cricket.com.au (@cricketcomau) October 30, 2019
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை ரன்அவுட் செய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பை ஆர்வக்கோளாறு காரணமாக இலங்கை வீரர் சந்தகன் கோட்டைவிட்டார்.
வார்னர் அடித்த பந்து நேராக எதிர்முனையில் இருந்த ஸ்டம்பில் பட்டது. ஆனால் அந்த நேரத்தில் எதிர்முனையில் இருந்த ஸ்மித் வெளியே சென்றார். இதனை பார்த்த சந்தகன் பந்தை கையில் வைத்துக்கொண்டு ஸ்டம்பை தூக்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை செய்யாமல் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையில் ஸ்டம்பை தூக்கினார். இதனால் ஸ்மித்தின் ரன் அவுட் ஆகும் வாய்ப்பு வீணானது.