- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடர் தான் முக்கியம். ஆஸி அணியிலிருந்து வெளியேறவுள்ள – நட்சத்திர வீரர்

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை தொடரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக இங்கு நடைபெறாத சூழலில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

இதன் காரணமாக அனைத்து அணிகளும் தற்போது எதிர்வரும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வரும் நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை விட எனக்கு ஆஷஸ் தொடர் தான் முக்கியம் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியதாவது :

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடரின்போது விளையாடுகையில் எனக்கு இருந்த முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தேன். அதன் காரணமாக தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் மாத்திரை உட்கொண்டு விட்டுத் தான் தூங்குவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரில் ஓய்வு எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஓய்வு நேரத்தில் எனது உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். முழங்கை காயம் சரியானால் மட்டுமே டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகவும் அப்படி காயம் குணமடையவில்லை என்றால் நான் ஆஷஸ் தொடருக்கு தொடருக்காக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு எப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடித்தமான ஒன்று என்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் தான் எதை வேண்டுமானாலும் செய்யவும் தயார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by