நான் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனது ரிட்டயர்மெண்ட் எப்போது தெரியுமா ? – ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்த தகவல்

Smith
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னணி வீரருமான ஸ்டீவ் ஸ்மித் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் 2010 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் அணிக்காக அறிமுகமானார். மேலும் தனது முதல் அறிமுக போட்டியின் பச்சை தொப்பியை ரிக்கி பாண்டிங் இடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் 8 ஆவது மற்றும் 9 ஆவது வீரராக களமிறங்கி ஒரு ரன் மற்றும் 12 ரன்கள் அடித்தார். மேலும் பவுலிங்கில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆரம்ப காலத்தில் சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்ட ஸ்மித் அதன் பின்னர் தன்னை தலை சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை மாற்றிக்கொண்டார்.

- Advertisement -

தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஸ்மித் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்னும் எவ்வளவு தூரம் தொடரப் போகிறோம் என்பது குறித்தும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதில் ரிக்கி பாண்டிங் இடம் இருந்து தனது அறிமுக தொப்பியை வாங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர் தான் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. இருப்பினும் இது ஒரு அற்புதமான பயணம் என்றும் எனக்கு இன்னும் 10 வருடங்கள் இருக்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பதிவின் மூலம் அவர் தனது ரிட்டயர்மென்ட் குறித்த தகவலினையும் தெரிவித்துள்ளார்.

Advertisement