எங்க அணியில இந்த 2 பேரை தவிற வேற யாரும் சரியாக விளையாடுறது இல்ல – கோவத்தை வெளிப்படுத்திய ஸ்மித்

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

- Advertisement -

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

Surya kumar 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். அது போட்டிக்கு உதவவில்லை மேலும் நாங்கள் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டியில் சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை அதுவே தோல்விக்கு காரணமாக கருதுகிறேன். எங்கள் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

- Advertisement -

அவர் கூறியது முற்றிலும் உண்மையாகத் தான் அமைந்துள்ளது. ஏனெனில் ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டிகளில் சிறிய மைதானத்தின் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் பலரும் அதிரடியான துவக்கத்தையும், சரமாரியன சிக்சர்களையும் அடித்தார்கள். ஆனால் அபுதாபி, துபாய் போன்ற மைதானங்கள் மிகவும் பெரிது என்பதால் ஓப்பனிங்கில் முற்றிலும் சொதப்பி வருகிறது. அது மட்டுமின்றி பேட்டிங் செய்ய ராஜஸ்தான் வீரர்கள் திணறி வருகின்றனர்.

buttler

அந்த அணியில் பட்லர் மற்றும் ஆர்ச்சர் போன்றோர் எவ்வளவு பெரிய மைதானமாக இருந்தாலும் சிறப்பாக ஆடுகின்றனர். மேலும் பந்துவீச்சிலும் ஆர்ச்சர் சிறப்பாக செயல்படுவதால் தற்போது அவர்கள் இருவர் மட்டுமே சிறப்பாக செயல்படுவதாகவும் மற்ற அனைவரும் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட தயாராக வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement