எல்லாத்தையும் கவர் பண்ணிருக்காங்க.. இந்திய அணிக்கு எதிராக இதை செய்வது கஷ்டம் தான்.. ஸ்மித் பேட்டி

Steve Smith
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதவிருக்கும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சவாலான ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடைபெற்ற 2 தொடர்களிலும் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்றது. எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றிகளை இந்தியா பெறுமா என்பதே இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றது. அப்படியிருந்தும் கடந்த 2 தொடர்களில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் அந்த அணி அவமானத் தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறை அந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

- Advertisement -

சவாலான இந்தியா:

இந்நிலையில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் இந்திய அணி நல்ல சமநிலையை கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். எனவே அவர்களை தங்களுடைய சொந்த மண்ணில் கூட தோற்கடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சவாலான இந்தியாவை இம்முறை எதிர்கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக ஸ்மித் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்தத் தொடருக்காக மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன். அது சிறந்த தொடராக இருக்கப் போகிறது. இந்தியா அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். நாங்களும் கடந்த சில வருடங்களாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். கடைசியாக இரண்டு முறை இங்கே வந்த போது நாங்கள் இந்தியாவை தோற்கடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்”

- Advertisement -

சமநிலை பொருந்திய இந்தியா:

“அவர்கள் அணியில் நல்ல சமநிலை இருக்கிறது. அனைத்து அடிப்படைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே அவர்கள் இங்கே நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவுக்கு மேலே அழுத்தத்தை போடும் போது அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். அதனால் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமானதாக இருக்கிறது”

இதையும் படிங்க: எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததுக்கு ஜடேஜா காரணமில்ல.. பொறாமையும் இல்ல.. அஸ்வின் ஓப்பன்டாக்

“எனவே இது பெரிய கோடைக் காலமாக இருக்கப் போகிறது. அந்த தொடருக்காக நானும் காத்திருக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. ஆனால் இம்முறை 1992க்குப்பின் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட மெகா தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement