
ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. அப்போட்டியில் ஜனவரி 16ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவரில் 189/6 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் அபாரமான சதமடித்து 110* (65) ரன்களை குவித்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 30 ரன்கள் கூட எடுக்கவில்லை. சிட்னி தண்டர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக சாம் கரண் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு பாபர் அசாம் வழக்கம் போல மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வருடம் சிட்னி அணிக்காக முதல் முறையாக விளையாடும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை. பெரும்பாலான போட்டிகளில் டெஸ்ட் போல மெதுவாக விளையாடிய பாபர் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். ஆனால் எதிர்ப்புறம் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் தங்களது சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரை சதத்தை அடித்தார்.
அப்போது 11வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்மித் சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் எடுக்கவில்லை. அதாவது பாபர் அசாமால் ஓவரின் ஆரம்பகட்ட பந்துகளில் அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கருதி ஸ்மித் கடைசி பதில் சிங்கிள் எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை. அதைப் பார்த்த பாபர் அசாம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அந்த சூழ்நிலையில் ரியன் ஹாட்லி வீசிய 12வது வரை எதிர்கொண்ட ஸ்மித் முதல் 4 பந்துகளில் 6, 6, 6, 6 என அடுத்தடுத்த சிக்சர்களை தெறிக்க விட்டார். அதோடு நிற்காத அவர் நோ-பாலாக போடப்பட்ட அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். அதற்கடுத்த பந்து ஒய்டாக மாறிய நிலையில் கடைசி பந்தில் டபுள் எடுத்த ஸ்மித் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்து பாபர் அசாமுக்கு அதிரடியாக விளையாடுவதன் பாடத்தைக் கற்பித்தார்.
இதையும் படிங்க: தடுமாறும் ஜடேஜா இடத்தை நிரப்பப்கூடிய அவரை ஏன் டீம்ல செலக்ட் பண்ணவே இல்லை.. அகர்கரை சாடிய ஸ்ரீகாந்த்
அதைப் பார்த்து நோஸ் கட்டான பாபர் அசாம் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் கடைசி வரை மெதுவாகவே விளையாடி 47 (39) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய ஸ்மித் 41 பந்தில் பிக்பேஷ் வரலாற்றில் 2வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற கிளன் மேக்ஸ்வெல் சாதனையை சமன் செய்து 100 (42) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் லல்சன் ஷா 13* (7), ஜேக் எட்வர்ட்ஸ் 17* (8) ரன்கள் அடித்ததால் 17.2 ஓவரிலேயே 191/5 ரன்களை எடுத்த சிட்னி சிக்ஸர்கள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.