1 ரன் அடிக்க 38 பந்துகள். மைதானத்தில் வைத்து ஸ்மித்தை கேலி செய்த ஆஸி ரசிகர்கள் – விவரம் இதோ

Smith

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 247 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிகளின் மூலம் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இன்று சிட்னி நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி தற்போது வரை முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 72 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்துள்ளது.

மார்னஸ் லாபுசாக்னே சதம் அடித்து 103 ரன்களுடனும், ஸ்மித் அரைசதத்தை கடந்து 52 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஸ்மித்தை விமர்சையாக கேலி செய்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ஸ்மித் இந்த போட்டியில் தனது முதல் ரன்னை அடிக்க 38 பந்துகளை எடுத்துக்கொண்டார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பவுலிங்கில் திணறிய ஸ்மித் 38 ஆவது பந்தில் தான் முதல் ரன் அடித்தார்.

smith 1

அதனால் அவர் முதல் ரன் அடிக்கும்போது ரசிகர்கள் சதம் அடித்தால் எவ்வாறு கைதட்டி ஆரவாரம் கொடுப்பார்களோ அதேபோல எழுந்து நின்று கைதட்டி விமர்சையாக கேலி செய்தனர். மேலும் இதனை ஐசிசி-யும் ஸ்மித் ஒரு ரன் அடிக்கும் பொழுது ஒரு அரங்கத்தில் பல கை தட்டுவது போல ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -