அணிப்பேருந்தில் ஏறாமல் சுமார் 3 கி.மீ ஓடியே ஹோட்டல் அறைக்கு சென்ற ஸ்மித் – காரணம் இதுதானாம்

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றது.

Pak va Aus

இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்கள் எடுத்த நிலையில் யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆவது முறையாக யாசிர் ஷா பந்துவீச்சில் ஸ்மித் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு 7 விரல்களை காண்பித்து யாசிர் ஷா அவரது விக்கெட்டை சைகை மூலம் கொண்டாடினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் அணி பேருந்து ஹோட்டலுக்கு கிளம்பி நிலையில் பேருந்தில் ஸ்மித் செல்லவில்லை. அதற்கு பதிலாக மைதானத்தில் இருந்து 3 கிலோமீட்டர் வரை ஓடிச்சென்றே தனது ஹோட்டல் அறைக்கு சென்று தங்கியுள்ளார் ஸ்மித். இந்நிலையில் மைதானத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்கு ஏன் இந்த ஓட்டம் என்ற கேள்வியை அவரிடம் எழுப்பப்பட்டது.

Smith

அதற்கு பதிலளித்த ஸ்மித் அதிகமாக ரன்கள் எடுக்க வில்லை என்றால் எனக்கு நானே எப்பொழுதும் தண்டனை கொடுத்துக் கொள்வேன் அதைப் போலத்தான் நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் எனக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இந்த மூன்று கிலோ மீட்டரை ஓடி வந்தேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Smith

மேலும் நான் சதம் அடித்தால் அன்று இரவு அதிக சாக்லேட்களை சாப்பிட்டு கொண்டாடுவேன் அதே போல் சதம் அடிக்கவில்லை என்றால் ஜிம்முக்கு சென்று அதிக உடற்பயிற்சி செய்து அல்லது சில கிலோமீட்டர் இதுபோன்று ஓடி எனக்கு நானே தன்னை கொடுத்து கொள்வேன் என்றும் ஸ்மித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.