ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொண்டது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்க அணியுடன் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
இந்திய அணியில் அவரும் ஒரு சூப்பர் பிளேயர் தான் : ஸ்டீவ் ஸ்மித்
அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 4-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது. இந்த அரையிறுதி போட்டியுடன் அந்த அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அந்த போட்டியில் முதலில் விளையாடியிருந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 48.1 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களையும் குவித்திருந்தனர். இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில் : எப்பொழுதுமே ரசிகர்கள் பலரும் இந்தியா சிறப்பாக செயல்படும்போது விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பெரிய வீரர்களின் பெயரை மட்டுமே பேசி வருகின்றனர்.
ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் 4 ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் விளையாடி வரும் விதத்தை பார்க்கையிலே எதிர்காலத்தில் அவர் பெரிய உச்சத்திற்கு செல்வார் என்று தெரிகிறது. எனவே அவரது ஆட்டத்தையும் நாம் பாராட்ட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தாலே போதும்.. நிச்சயம் இதெல்லாம் தானா நடக்கும் – சூரியகுமார் யாதவ் பூரிப்பு
ஸ்டீவ் ஸ்மித் கூறியது போன்றே இந்திய அணி எப்போதெல்லாம் டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று ரன் குவித்து இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். கடைசியாக நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கூட இந்திய அணியை சரிவிலிருந்து அவரே மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.



