கோலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் இதுதான். அதுவே அவரின் வெற்றிக்கு காரணம் – புகழ்ந்து தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்

Smith-1
- Advertisement -

தற்போதைய நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித்தும் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் இருவரில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இருவருமே சிறப்பான திறமை கொண்டவர்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி சதங்களை குவித்து வருகிறார்.

smith

அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் தனிப்பட்ட வகையில் சாதனைகளை படைத்துக் கொண்டே வருகிறார். விராட் கோலியின் பேட்டிங் சரியான முறைப்படி டெக்னிக்கலாக இருக்கும் ஆனால் ஸ்மித்தை பொறுத்தவரை சற்றே வித்தியாசமான முறையில் மரபு சாராத பேட்டிங் முறையாக இருக்கும். இருப்பினும் இருவரும் ரன்களை குவித்து வருகின்றனர். அதே போன்று அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது.

- Advertisement -

பெரும்பாலான நேரங்களில் கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மென் தான் என்பது கேள்வியாகவே அமையும். அந்த வகையில் தற்போது அந்த கேள்விக்கு ஸ்மித்தே பதிலளித்துள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்மித் கோலி குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்பொழுதுதான் கோலியிடம் பார்த்து வியக்கும் விஷயங்களையும் அவர் பட்டியலிட்டார்.

Smith

இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : விராட் கோலியை பார்த்தாலே எனக்கு வியப்பாக இருக்கும். அவர் ஒரு அருமையான வீரர் அவரது சாதனைகளை அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்திய கிரிக்கெட்டுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போட்டிகளின் மீது அவரது ஈடுபாடும், அவர் வைத்திருக்கும் ஆர்வமே அவரை சிறப்பா செயல்பட வைக்கிறது என நான் நினைக்கிறன்.

- Advertisement -

மேலும் கோலி திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவர் அதனாலேயே கடுமையாக பயிற்சி செய்கிறார். மேலும் தனது கடின பயிற்சியின் மூலம் உடலையும் மிக பிட்டாகவும், வலுவாகவும் வைத்துள்ளார். அதேபோன்று கோலியிடம் நான் பார்த்து வியக்கும் மிக முக்கியமான விஷயம் யாதெனில் அவர் இலக்கை விரட்டும் விதம்தான்.

kohli 2

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் சேசிங் செய்யும் விதம் அருமையானது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சராசரி அசாதாரணமானது. இலக்கினை எதிர்த்து அவர் போராடும் விதமே அவருக்கு பெரிய பலமாக அமைகிறது. அவரின் அந்த மனநிலையே அவரை வெற்றிப் பாதைக்கும் கொண்டு செல்கிறது என்று விராட் கோலியை புகழ்ந்து ஸ்மித் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement