டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் – கோச் பாண்டிங் அறிவிப்பு

Ponting
- Advertisement -

கடந்த ஆண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் ஆடாத ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட மிக ஆர்வமாக உள்ளேன் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியதை அடுத்து, அவருக்கு முதலில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Smith

- Advertisement -

இது குறித்து பதிலளித்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் : ஸ்டீவ் ஸ்மித்துக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது ஆகும். ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் டாப் 3 ஆர்டரில் தான் விளையாடுவார். இவ்வாறு ரிக்கி பாண்டிங் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதற்கு குறித்த பதிலை சமீபத்தில் கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டை காயம் காரணமாக, ஸ்ரேயாஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது. எனவே அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தலைமை தாங்க உள்ளார். அவரது தலைமையில் விளையாட போகும் டெல்லி அணியில், ஸ்மித்தும் விளையாடினால் அவரது அனுபவம் டெல்லி அணியை வெற்றி பெறச்செய்ய கைகொடுக்கும் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Smith

டெல்லி அணியில் ஏற்கனவே டெல்லி அணியில் ஷிகர் தவன், பிரித்வி ஷா, ரஹானே மற்றும் பண்ட் இருக்கையில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு விளையாட வாய்ப்பு அவ்வளவாக கிடைக்காது. அதைத்தான் ரிக்கி பாண்டிங்கும் கூறியுள்ளார். எனவே ஸ்டீவ் ஸ்மித் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடவாரா என்பது கேள்விக்குரிய விஷயமாகும்.

pant-2

ஒருவேளை அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அணிக்கு மிகப்பெரிய அளவில் தன்னுடைய பங்கை அளிப்பார் என்றும், அவரது அனுபவம் டெல்லி அணிக்கு மேலும் பலத்தைக் கூட்டி டெல்லி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement