- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ 2024 : டிராவிஸ் ஹெட் கிடையாது.. இந்த இந்திய வீரர் தான் அதிக ரன்கள் அடிப்பாரு.. ஸ்மித் கணிப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2024 ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்தத் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக விளையாடி வருகின்றன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது.

வழக்கம் போல இந்த வருடமும் சிறப்பாக விளையாடிய செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் அணிகள் மற்றும் ஃபைனலில் விளையாடப் போகும் அணிகள் பற்றிய கணிப்புகள் காணப்படுகின்றன. அதே போல இந்த வருடம் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்கும் வீரர்களை பற்றியும் முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக விக்கெட்களை எடுப்பார் என்று சமீபத்தில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஸ்மித் கணிப்பு:
இருப்பினும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் அடித்து சாதனை படைப்பார் என்றும் அவர் கணித்திருந்தார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை அதிக ரன்கள் அடிப்பவராக விராட் கோலி இருப்பார் என்று அவர் கணித்துள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்தத் தொடரில் என்னுடைய அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரராக விராட் கோலி இருப்பார். அவர் ஐபிஎல் தொடரிலிருந்து அற்புதமாக விளையாடி இங்கே வருகிறார். அந்த வகையில் நல்ல ஃபார்மை கொண்டு வரும் அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் முன்னாள் முன்னாள் ஜாம்பவான் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்தது பின்வருமாறு. “நான் டாப் ஆர்டர் வீரரை தேர்வு செய்வேன். அந்த வகையில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரராக விராட் கோலி அல்லது ஜோஸ் பட்லர் இருப்பார்கள்” என்று கூறினார். முன்னதாக டி20 உலகக் கோப்பைகளில் 2 தொடர்நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அணி அரையிறுதிக்கு போகனும்னே பிளான் போட்டு வேலை பாத்து இருக்காங்க – வெளியான குற்றச்சாட்டு

மேலும் கடந்த முறை அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த அவர் இதுவரை டி20 உலகக் கோப்பையில் 27 போட்டிகளில் 1141* ரன்களை குவித்துள்ளார். அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையையும் விராட் கோலி படத்துள்ளார். அந்த வகையில் இம்முறையும் அவர் அசத்துவார் என்று நம்பலாம்.

- Advertisement -