தற்போதைய கிரிக்கெட்டின் 4 தலைசிறந்த பவுலர்கள் இவர்கள் தான் – ஸ்டீவ் ஸ்மித் தேர்வு

Smith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்குபவரில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். தற்போதைய கிரிக்கெட்டில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நான்கு பேர்தான் ஃபேப் போர் என்று அழைக்கப்படும் நான்கு சிறப்பான வீரர்கள் இவர்கள் அனைவருமே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையும், அதுமட்டுமின்றி உலகளவில் உள்ள பவுலர்களுக்கு எதிராகவும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது எந்த பவுலருக்கும் சவாலான விடயம். அந்த வகையில் தற்போது ஸ்டீவ் ஸ்மித் தனக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய 4 பவுலர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் முதலில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனை அவர் தேர்வு செய்துள்ளார்.

ஆண்டர்சன் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேபோன்று இரண்டாவதாக சக நாட்டு வீரர் பேட் கம்மின்ஸ்ஸை தேர்வு செய்துள்ளார். கம்மின்ஸ் கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

anderson

மூன்றாவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை குறிப்பிட்டுள்ளார். நான்காவதாக தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை தேர்வு செய்துள்ளார்.

bumrah 2

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் : சிறந்த நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வது கடினம் தான். அந்த அளவுக்கு தற்போது அற்புதமான பவுலர்கள் உலக அளவில் உள்ளனர். இருப்பினும் ஆண்டர்சன், கம்மின்ஸ், பும்ரா, ரபாடா ஆகியோர் சிறந்த பவுலர்களாக இருக்கிறார்கள் என்று தனது அனுபவத்தின் மூலம் ஸ்மித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement