- Advertisement -
உலக கிரிக்கெட்

சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் தான். அதேவேளையில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? – பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித்திடம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு உரையாடல் நிகழ்ச்சியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஸ்டீல் ஸ்மித் கூறிய விடயங்கள் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறந்த கிரிக்கெட்டர் யார்? : ஸ்டீவ் ஸ்மித் பதில்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற பட்டியலில் அடிக்கடி சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரைன் லாரா, விராட் கோலி போன்ற பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. அந்தந்த சதாப்தத்திற்கு ஏற்றவாறு முன்னாள் வீரர்கள் பலரும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான் என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ஆனால் அதே வேளையில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அவரை தாண்டி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்றால் தென்னாப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் தான் என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஏனெனில் ஜாக் காலிஸ் கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதனால் நான் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரராக நான் ஜாக் காலிசை சொல்வேன். மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் தான் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சிறந்த கிரிக்கெட்டர் என்று சொல்லும் போது :

- Advertisement -

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே பங்களிப்பை வழங்கி இருக்க வேண்டும். அந்த வகையில் ஜாக் காலிஸ் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. எனவே சச்சின் டெண்டுல்கரை சிறந்த பேட்ஸ்மேன் எனவும், ஜாக் காலிசை சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அப்பாவின் வழியை பின்பற்றிய அர்ஜுன் டெண்டுல்கர்.. திருமண பந்தத்தில் உள்ள ஒற்றுமை – விவரம் இதோ

அவர் கூறியது போன்றே சர்வதேச கிரிக்கெட்டில் 34,357 ரன்கள் அடித்துள்ள சச்சின் 100 சதங்களை விளாசியுள்ளார். அதேவேளையில் 19 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜாக் காலிஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலா பத்தாயிரம் ரண்களுக்கு மேலும் 250 விக்கெட்டுக்கும் மேலும் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 25,534 ரன்கள் குவித்துள்ள அவர் பந்து வீச்சிலும் 577 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -