இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக இன்னும் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் வாய்ப்பினை பெற்ற அவர் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தந்தையின் வழியை பின்பற்றிய அர்ஜுன் டெண்டுல்கர் :
கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியானது அவரை அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் வேளையில் அவரது மகனான இவர் தற்போது வரை பெரியளவு கவனம் பெறாமல் இருந்து வருகிறார்.
ஆனாலும் தொடர்ச்சியாக தனது விடாமுயற்சியும் அவர் உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் 25 வயதான அவருக்கு தன்னுடைய நீண்ட நாள் தோழியான சானியா சந்தோக் என்னும் நபருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அவர்கள் இருவருமே நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்த வேளையில் இருவரது குடும்பமும் அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ள அதற்கான அறிவிப்பும் முறைப்படி வெளியாகும் என்று தெரிகிறது.
இவ்வேளையில் சச்சின் டெண்டுல்கரை போன்று தனது திருமண விடயத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் எடுத்துள்ள ஒரு முடிவு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் தன்னைவிட 5 வயது மூத்தவரான ஒரு மருத்துவரை காதலித்து திருமணம் செய்தார்.
இதையும் படிங்க : பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு – விவரம் இதோ
அதேபோன்று தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் தன்னைவிட ஒரு வயது மூத்த கால்நடை மருத்துவரை காதல் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த விடயத்தில் தந்தையை போலவே வயது மூத்த ஒரு மருத்துவர் ஒருவரை அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் செய்ய இருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



