எங்களுக்கு எதிரா சதி பண்ணிட்டாங்க – போட்டி துவங்குவதற்கு முன்பே இந்தியாவை விமர்சித்த ஸ்மித் – ஹர்ஷா போக்லே பதிலடி

Steve Smith Harsha Bhogle
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டதால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவையும் இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. மறுபுறம் இத்தொடரில் 3 போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா விளையாடுகிறது.

முன்னதாக 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கடைசி இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிக்கு ஒரு வகையான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் முதன்மை போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததால் இம்முறை இந்தியாவிடம் நம்பிக்கையும் நியாயத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதம் தெரிவித்தார். அந்த கருத்தை ஏற்றுக் கொண்ட முன்னாள் வீரர் இயன் ஹீலி இம்முறையும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் தான் இருக்கும் என்பதால் இத்தொடரில் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியாவே வெல்லும் என விமர்சித்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

- Advertisement -

என்னாங்க பிட்ச்:
அத்துடன் இந்தியாவின் மீது நம்பிக்கை இல்லாமல் சிட்னி நகரில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச் ஒன்றை உருவாக்கி அதில் பயிற்சி எடுத்து விட்டு ஆஸ்திரேலிய அணியினர் இந்தியா வந்துள்ளனர். அந்த நிலையில் அந்த பயிற்சியை முடித்துக் கொண்டு பிப்ரவரி 9இல் முதல் போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தை சென்றடைந்த ஆஸ்திரேலியா அணியினர் அங்கு உருவாக்கப்பட்டுள்ள பிட்ச்சை நேற்று தீவிரமாக ஆராய்த்தனர். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் படுக்காத குறையாக முட்டி போட்டு ஆராய்ந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 6 வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால் அவர்களை சாய்ப்பதற்காக 2 புறங்களின் வலது பக்கத்தில் பிட்ச் காய்ந்தவாறு இருக்கும் வகையிலும் எஞ்சிய பகுதிகளில் தண்ணீர் அடித்து லேசான ஈரப்பதத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. அதாவது காய்ந்த இடத்தில் அதிகமான சுழல் ஏற்பட்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் இது என்னய்யா பிட்ச் என்ற வகையில் ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது குறிப்பாக ஒரு புறத்தில் அதிகமாக காய்ந்துள்ளது. அதனால் அங்கே சுழல் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இடது கை ஸ்பின்னர்கள் எங்களின் இடது கை பேட்ஸ்மேன்களை தாக்குவார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக இருபுறங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமான காய்ந்த பகுதிகள் காணப்படுகிறது. அதைத் தவிர நான் உண்மையில் ஒரு நல்ல அளவை பெற முடியவில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பவுன்ஸ் சீராக இருக்காது என்று நினைக்கிறேன். அத்துடன் வெடிப்புகள் மிகவும் தளர்வாக உள்ளன. எனவே இந்த பிட்ச் பற்றி முழுமையாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் உலகில் அனைத்து நாடுகளும் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்துவதற்காக தாங்கள் விரும்பும் பிட்ச்சுகளை உருவாக்குவது வழக்கம் தானே என்று பதிலடி கொடுக்கிறார்கள். அத்துடன் நீங்கள் மட்டும் கடந்த மாதம் காபாவில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக 1.4 மி.மீ பச்சை புற்கள் கொண்ட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் உருவாக்கி 2 நாட்களுக்குள் வென்றது நியாயமா என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: IND vs AUS : இப்போ வாங்க மோதி பாத்துக்கலாம். இந்திய பந்துவீச்சாளருக்கு சவால் விட்டு – ஸ்டீவ் ஸ்மித் அதிரடி

அத்துடன் பிரபல வர்ணையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டரில் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே பிட்ச்களை பற்றி அதிகப்படியான பேச்சுவார்த்தைகள் காணப்படுகிறது. முதலில் இருவருக்கும் அந்த பிட்ச் பொதுவானது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடுத்ததாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிரணிக்கு சவாலை கொடுப்பதற்காகவே இந்த பிட்ச் விருந்தளிக்கப்பட்டுள்ளது. சொந்த மண் மற்றும் வெளியூர் போட்டிகளின் சாராம்சமும் அது தானே” என்று கூறியுள்ளார்.

Advertisement