இந்திய தொடர் மாதிரி பாத்ததில்ல.. ஆனா இங்கிலாந்தின் அந்த ஸ்டைல் ஆஸியில் வேலையாகாது.. ஸ்மித் பேட்டி

Steve Smith
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி சமன் செய்தது. அத்தொடரில் விராட், ரோகித் உள்ளிட்ட சீனியர்கள் இல்லாததால் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தார்கள். ஆனால் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது.

குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் காலத்திற்கும் மறக்க முடியாத மிராக்கள் வெற்றியைப் பெற்றது. மறுபுறம் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தைச் சந்தித்தது. அடுத்ததாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இங்கிலாந்து அங்கு வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

சிறந்த இந்திய தொடர்:

கடைசியாக 2011 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் இங்கிலாந்து திணறி வருகிறது. இருப்பினும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் ஸ்டைலில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெற இங்கிலாந்து தயாராகி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா சமன் செய்த தொடர் தாம் பார்த்ததிலேயே சிறந்தது என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இருப்பினும் தங்களுடைய நாட்டில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வெல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக அவர்கள் விளையாடிய தொடர் பல வருடங்களில் நான் பார்த்ததில் சிறந்தது”

- Advertisement -

ஆஷஸ் சவால்:

“இங்கிலாந்து அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்வது பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில் எங்களுடைய பிட்ச்கள் தந்திரமாக இருக்கும். இங்கே எங்களிடம் வெற்றிகரமான அனுபவமிக்க பவுலிங் அட்டாக் இருக்கிறது. ஜோ ரூட் கடந்த 2 வருடங்களாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். தன்னுடைய அரை சதங்களை சதமாக மாற்றி வருகிறார்”

இதையும் படிங்க: சிலருக்கு பிடிக்கலன்னு விராட் கோலி அதை குறைச்சுட்டா.. கிங் பிளேயராக இருக்க மாட்டாரு.. ஸ்ரீசாந்த் பேட்டி

“ஆனால் ஆஸ்திரேலியாவில் இதுவரை அவர் சதத்தை அடித்ததில்லை. இம்முறை அதை அடிப்பதற்கான இலக்கை அவர் கொண்டிருப்பார். ஆனால் இம்முறையும் அவர் சதத்தை அடிக்க மாட்டார் என்று நம்புகிறோம். நாங்கள் எங்களுடைய திறமைகளை பேசுவதற்காக விடுவோம். ஆஸ்திரேலியாவில் நிலவும் சூழ்நிலைகள் எங்களுக்குத் தெரியும். அங்கே எங்களுடைய ஆட்டத்தை நாங்கள் நம்பி விளையாடுவோம்” என்று கூறினார்.

Advertisement