விராட் கோலி மாஸ்டர்க்ளாஸ் எதிர்பார்த்தோம்.. இந்தியா 2 பரிசை தட்டில் வெச்சு கொடுத்துட்டாங்க.. ஸ்மித் மகிழ்ச்சி பேட்டி

Steve Smith
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 164-5 என தடுமாறி வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் 3 ரன்களில் அவுட்டானார். கேஎல் ராகுல் 24, விராட் கோலி 36 ரன்கள் அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார்கள். துவக்க வீரராக சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 82 ரன்கள் அசத்திய போதிலும் ரன் அவுட்டாகி சென்றார். அடுத்த சமயத்தில் இந்தியா இன்னும் 310 ரன்கள் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

2 விக்கெட்:

அதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர். அப்போது அவர்களில் ஒருவரை இரண்டாவது நாளுக்குள் அவுட்டாக்கினால் போதும் என்று நினைத்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை ஆரம்பத்தில் அடிக்காமல் விட்ட விராட் கோலி நிதானமாக விளையாடியதால் மாஸ்டர் கிளாஸ் சதம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போது ஜெய்ஸ்வால் ரன் அவுட்டாகி விராட் கோலியும் தன்னுடைய விக்கெட்டை பரிசாக கொடுத்ததை தாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ஸ்மித் தெரிவித்துள்ளார். அதனால் இந்த போட்டியில் தங்களுடைய வெற்றி பிரகாசமாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

ஸ்மித் மகிழ்ச்சி:

இது பற்றி ஸ்மித் பேசியது பின்வருமாறு. “அது பெரிய தருணம். ஜெய்ஸ்வால் ஆம் என்று சொல்லி ரன் எடுக்க ஓடி வந்தார். விராட் அவரை திருப்பி அனுப்பினார். அது தான் அங்கே எளிதாக நடந்தது. அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்ததும் இன்னும் 2 விக்கெட்டுகள் எங்களுக்கு கிடைத்தது. அது நாளைய நாளில் எங்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம்”

இதையும் படிங்க: இந்திய கேப்டனை நினச்சா சோகமா இருக்கு.. இது மட்டும் நடக்கலன்னா ரோஹித் கேரியர் ஓவர்.. மார்க் வாக் கவலை

“அந்த இருவருமே நன்றாக செய்ததாக தெரிந்தது. ஜெய்ஸ்வால் சுமாரான பந்துகளில் அதிரடியாக விளையாடினார். விராட் கோலி மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல தெரிந்தது. ஏனெனில் அவர் மெதுவாக தனது ஆட்டத்தை துவங்கினார். அதனால் அவர்களில் ஒருவர் விக்கெட்டை நாங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் உடைந்ததும் மற்றொருவர் வேகமாக அவுட்டானது எங்களுக்கு நல்லதாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement