இந்திய கேப்டனை நினச்சா சோகமா இருக்கு.. இது மட்டும் நடக்கலன்னா ரோஹித் கேரியர் ஓவர்.. மார்க் வாக் கவலை

Mark Waugh
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடி வரும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 164-5 ரன்கள் எடுத்து மீண்டும் தடுமாறி வருகிறது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 3, விராட் கோலி 36, ராகுல் 24 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் ரிஷப் பண்ட், ஜடேஜா போராடி வருகிறார்கள்.

- Advertisement -

ரோஹித் திணறல்:

முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் அடுத்த 3 போட்டிகளில் இந்தியா திணறலாக விளையாடி வருகிறது. அதை விட ரோகித் சர்மா பேட்டிங்கில் 20 ரன்களை தாண்டுவதற்கே திண்டாடி வருகிறார். அந்தளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய ஃபார்ம் படுமோசமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் கடைசியாக உள்ள 3 இன்னிங்க்ஸில் ரோகித் சர்மா அரை சதம் போன்ற பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்றால் கேரியர் முடிந்து விடும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கடைசி மூன்று இன்னிங்ஸில் ரோகித் சர்மா ஏதாவது செய்யாமல் போகும் பட்சத்தில் அவருடைய கேரியர் முடியக்கூடும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -

கேரியர் முடிகிறதா:

அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கேரி ஓ’கீபி பேசியது பின்வருமாறு. “இப்போட்டியில் ரோஹித் சர்மா மிகவும் பெரிய தவறை செய்தார். அங்கே அடிப்பதற்கு எதுவுமே இல்லை. இத்தனைக்கும் அது ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்த ஷாட். ஆனால் அதை ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அவர் அவ்வாறு அடித்தார்”

இதையும் படிங்க: லாரா, சச்சினை விட என்னோட கடைசி ரூபாயில் கோலி ஆட்டத்தை பார்ப்பேன்.. 3 காரணம் இது தான்.. ஜஸ்டிங் லாங்கர்

“அவர் வேகம் அல்லது பவுன்ஸ் ஆகியவற்றை உணர்ந்து விளையாடியதாக தெரியவில்லை. இது இந்திய கேப்டனின் சோகமான நிலையாகும்” என்று கூறினார். அந்த வகையில் மிடில் ஆர்டரில் இருந்து துவக்க வீரராக களமிறங்கியும் ரோஹித் சர்மா ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் பேசாமல் ஓய்வு பெறுங்கள் என்று இந்திய ரசிகர்களே அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement