தடை விதிக்கப்பட்ட ஸ்மித்..! மீண்டும் களமிறங்குகிறார்..! டி 20 போட்டியில் யார் கூட தெரியுமா..?

- Advertisement -

சமீபத்தில் பால் டேம்பெரிங் என்னும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அடுத்த மாதம் கனடா நாட்டில் நடக்கவுள்ள டி20 போட்டிகளில் விளையாட்டுள்ளார்.
smith

கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் இவர்களை அணியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் இவர்கள் மூவரும் சர்வதேச போட்டிகளில் விளையாட மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளுர் போட்டிகளில் விளையாட இவர்களுக்கு எந்த தடையும் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
Smith
இதனால் தற்போது அடுத்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி கனடாவில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகவுள்ளது. உள்ளூர் தொடரான இந்த போட்டிகளில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள 3 பேரும் விளையாடலாம் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement