எங்க போட்டாலும் அடிக்காம விடமாட்டேன். பந்துடன் மல்லுக்கட்டி பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித் – வீடியோ இதோ

Smith
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மூன்றாவது போட்டியில் கலந்து கொள்ளாத ஸ்மித் மீண்டும் இந்த போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

இரண்டாவது போட்டியின்போது ஆர்ச்சர் வீசிய பந்தில் மூலம் பலமாக தாக்கப்பட்ட ஸ்மித் ஒரு ஆட்டம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி வார்னர் விக்கெட்டை விரைவில் இழக்க நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித் களமிறங்கினார்.

நிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் அரைசதம் அடித்த பந்து வித்தியாசமான விதத்தில் அமைந்தது. பவுலர் வயிட் லைனில் பந்து வீச அதையும் துரத்திச் சென்று ஸ்மித் அடித்த இந்த பவுண்டரி தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. ஏபி டிவில்லியர்ஸ் அடிப்பது போன்று இந்த வித்தியாசமான ஷார்ட் இருந்தது என்று இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement