ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல். முதல் போட்டியில் யார் கேப்டன் – முக்கிய வீரர் பங்கேற்பதில் சந்தேகம்

rr
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை ஓப்பனாக பேசிவருகின்றனர். அதேபோல் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்த தொடர் குறித்த தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முதல் சில போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின்போது ஸ்டீவ் ஸ்மித் தலைப்பகுதியில் காயமடைந்தார்.

Smith-1

அதனால் பரிசோதனையில் இருந்த அவர் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற போதும் மூளையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடவில்லை. முன்னெச்சரிக்கை காரணமாக அவர் விளையாடாமல் அமர வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் துவக்க போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் விளையாட இருந்த நிலையில் அவர் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

stokes

மேலும் துவக்க போட்டிகள் சிலவற்றை அவர் தவறவிடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக கேப்டனாக யாரை நியமிப்பது ? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இது ராஜஸ்தான் அணிக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் ஒருவேளை கேப்டனாக செயல்படாத பட்சத்தில் பென் ஸ்டோக்ஸ் அல்லது ராபின் உத்தப்பா ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப் பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement