ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 52, ஓலி போப் 46, ஜேமி ஸ்மித் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பந்து வீசியாக இங்கிலாந்து 132 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26, கேமரூன் கிரீன் 24, டிராவிஸ் ஹெட் 21 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5, பிரைடன் கார்ஸ் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
205 ரன்கள் இலக்கு:
அடுத்ததாக 40 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலேயே ஜாக் கிராவ்லி மீண்டும் ஸ்டார்க்கின் அபார கேட்ச்சில் டக் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டக்கெட்டை 28 ரன்களில் அவுட்டாக்கிய ஸ்காட் போலண்ட் மறுபுறம் நிதானத்தைக் காட்டிய ஓலி போப்பையும் 33 ரன்னில் காலி செய்தார்.
மிடில் ஆர்டரில் ஜோ ரூட் 8, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி ப்ரூக் டக் அவுட்டான நிலையில் ஜேமி ஸ்மித் 15 ரன்னில் நடையைக் கட்டினார். அதனால் 104/7 என திணறிய இங்கிலாந்துக்கு லோயர் ஆர்டரில் அட்கின்சன் அதிரடியாக 37 (32), பிரைடன் கார்ஸ் 20 (20) ரன்கள் குவித்து ஓரளவு கை கொடுத்தனர்.
ஸ்மித் உலக சாதனை:
அதனால் ஓரளவு தப்பிய இங்கிலாந்து 164 ரன்கள் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் ஸ்டார்க் 3, ப்ரெண்டன் டோகேட் 3, ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. முன்னதாக இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த 4 கேட்ச்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக மொத்தம் 61 கேட்ச்கள் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: அவர் விரும்பினாலும், அவரோட உடம்பு ஒத்துழைக்கல.. சுப்மன் கில் விலகல் குறித்து – ரிஷப் பண்ட் பேட்டி
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக கேட்ச்களை பிடித்த ஃபீல்டர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஸ்டீவ் ஸ்மித்/கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா): தலா 61, இங்கிலாந்துக்கு எதிராக
2. ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா): 57, இங்கிலாந்துக்கு எதிராக
2. இயன் போத்தம் (இங்கிலாந்து): 57, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. ராகுல் டிராவிட் (இந்தியா): 47, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக



