நீங்க விளையாடிய வரைக்கும் போதும் கெளம்புங்க. இந்திய சீனியர் வீரரை வீட்டுக்கு அனுப்பிய ஸ்மித் – விவரம் இதோ

Smith

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

Uthappa

இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியுற்றதால் மூன்றாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஸ்மித் திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக படு மோசமான தோல்வியை ராஜஸ்தான் சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியில் இருந்து முன்னணி இந்திய சீனியர் வீரர் ராபின் உத்தப்பா நேற்றைய போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான பார்ம்மை தொடர்ந்த உத்தப்பாவை கொல்கத்தா அணி நிர்வாகம் கழட்டிவிட்டது. இருப்பினும் அவர் அனுபவ வீரர் என்ற காரணத்தினால் அவர் மீது நம்பிக்கை வைத்து ராஜஸ்தான் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் தனக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறிய உத்தப்பா முதலிரண்டு போட்டிகளிலும் 5 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் அவர் அனுபவ வீரர் என்பதால் மீண்டும் 2 போட்டியில் வாய்பளித்தது. ஆனால் அதிலும் அவர் 2 ரன்கள் மற்றும் 17 ரன்கள் என ஏமாற்றம் அளிக்க ராஜஸ்தான் அணிக்கு அவரது பேட்டிங் மிகப் பெரிய பாதிப்பாக அமைந்து.

uthappa 1

அதனால் நேற்றைய போட்டியில் அவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக உள்ளூர் ராஜஸ்தான் அணியின் கேப்டனான மகிபால் லாம்ரோர் களமிறக்கப்பட்டார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருவதால் இனி அவரை ராஜஸ்தானில் தொடர்வார் என்றும் இனிமேல் ராபின் உத்தப்பாவிற்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரை வைத்து இனிமேலும் பரிசோதிக்க போவதில்லை என்றும் இளம் வீரர்களை வைத்து அவர் வெற்றிப் பாதைக்கு திரும்பு தயாராகி வருவதாக தெரிகிறது.