எவ்வளவு ரன் அடிச்சாலும் நீ ஏமாத்துக்காரன் தான். ஸ்மித்தை கண்டபடி விளாசிய – இங்கிலாந்து வீரர்

Smith
- Advertisement -

இங்கிலாந்தில் தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 2 சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் என 671 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

Smith

- Advertisement -

மேலும் அவரது இந்த அசாத்திய பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய அணி 2001ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளது. தவிர மீதி எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தாலே கோப்பையை வென்று விடும் நிலையை எட்டி உள்ளதால் ஆஸ்திரேலியா தற்போது சிறப்பான நிலையில் உள்ளது. மேலும் ஸ்மித்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எத்தனை சாதனைகளை படைத்தாலும் எத்தனை சதங்கள் அடித்தாலும் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று தான் என் நினைவில் என்றும் இருப்பார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Smith

மேலும் ஸ்மித்துக்கு மன்னிப்பே கிடையாது அவர் எத்தனை சாதனை படைத்தாலும் தென்னாப்பிரிக்க சம்பவம் தான் ஞாபகத்திற்கு வரும். அவர் மேல் இருக்கும் கருத்து என்றும் என்னிடம் மாறாது என்று அவர் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement