ஸ்மித்துடன் பிரச்னையா..? மீண்டும் சந்திக்கவில்லை..! வார்னர் பரபரப்பு தகவல்..! – விவரம் உள்ளே

warnerfier
- Advertisement -

கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் இவர்களை அணியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.
Smith
இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்ணர் ஆகியோருக்கு சலுகை வழங்கி உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஓராண்டு
தாடையில் இருக்கும் இவர்கள் இருவரும் கனடா நாட்டில் நடக்கும் நடக்கும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் பனி போர் நிலவுவதாக ஒரு சில செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து வார்னர் சமீபத்தில் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் கனடா போட்டியின் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற வார்னர் கூறுகையில்”எனக்கும் ஸ்மித்தும் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறார்கள். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் இருவரும் சிறந்த நபர்களாக இருந்து வருகிறோம்.
david
இந்த மூன்று மாதங்களில் நாங்கள் மீண்டும் சந்திக்கவில்லை. எங்களுக்கு இன்னும் ஒன்பது மாத காலம் தடை உள்ளது, அந்த நேரத்தை நான் என்னுடைய குடும்பத்தாருடன் செலவழிப்பேன். நான் கிரிக்கெட்டிற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன், அது தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. கிரிக்கெட்டிற்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன் ” என்று தெரிவித்துளளார்.

Advertisement