பந்தை சேதப்படுத்திய விவகாரம்…கேப்டன் பதவியிலிருந்து விலகினாரா ஸ்மித் ? – விவரம் உள்ளே

smith3
- Advertisement -

தற்போது தென்ஆப்பிரிக்க – ஆஸ்திரேலியா அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கேப்டவுனில் நடைபெற்று வருகின்றது.

smith

- Advertisement -

நேற்றைய தினத்தின் போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு அடிக்கடி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. பின்னர் அவர் ஆட்டத்தின் நடுநடுவே தன் பேன்டிற்குள் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை எடுத்து பந்தில் தேய்க்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.

பின்னர் இந்த புகார் நடுவர்களிடம் சென்றது. நடுவர்கள் விசாரித்த போது கேமரூன் பேன்கிராப்ட் முதலில் மறுத்தார். தான் கருப்பு துணி மட்டுமே வைத்திருந்ததாக கூறினார். பின்னர் மாலையில் பேசிய அவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் அணியிலுள்ள சில மூத்த வீரர்களின் ஆலோசனைப்படியே தான் அப்படி செய்ததாகவும் கூறினார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய செயல் தனக்கும் தெரிந்தே நடந்தது எனவும் இனிமேல் அதுபோல நடக்காது எனவும் கூறினார்.

- Advertisement -

CameronBancroft

இந்த நிகழ்வுகளை கவனித்து வந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிலர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவன் ஸ்மித் பதவி விலகவேண்டும் என்று கடும் நெருக்கடி குடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்டீவன் ஸ்மித் நேற்று நடந்த மோசமான நிகழ்விற்கு தான் பொறுப்பேற்பதாக கூறி தனது கேப்டன் பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார்.அவருடன் டெஸ்ட் அணிக்கான துணைக்கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னரும் பதவி விலகினார்.

Advertisement