- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூப்பர் 8இல் இந்தியா அவரை லெவனில் சேர்க்கனும்.. அதுக்காக டேஞ்சரான ஜடேஜா தூக்கிடாதீங்க.. பிளெமிங் அட்வைஸ்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி துவங்கிய இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்க அணிகளை தோற்கடித்தது. அதனால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஜூன் 20ம் தேதி இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. முன்னதாக இத்தொடரில் இந்தியாவின் லீக் போட்டிகள் அனைத்தும் நியூயார்க் நகரில் நடைபெற்றது. அங்கே 120 ரன்களை தொடுவதற்கே பேட்ஸ்மேன்கள் திண்டாடும் அளவுக்கு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இந்தியாவின் 3 சூப்பர் 8 சுற்று போட்டிகளும் மண்ணில் நடைபெறுகிறது.

- Advertisement -

பிளெமிங் அட்வைஸ்:
அங்கே வேகத்துக்கு நிகராக சுழல் பந்து வீச்சும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சூப்பர் 8 போட்டிகளில் இந்தியா எக்ஸ்ட்ரா ஸ்பின்னருடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் குல்தீப் யாதவை இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் மற்றும் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

அதற்காக ஆபத்தான ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிடக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் அதற்கான காரணத்தை பற்றி பேசியது பின்வருமாறு. “தொடரின் இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் போது பிட்ச் கொஞ்சம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தால் குல்தீப் யாதவ் விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பை எக்ஸ்ட்ராவாக ஏற்படுத்திக் கொடுப்பார். நீங்கள் ஒரே வழியில் செட்டாகி விட்டு சூழ்நிலைக்கு தகுந்த சாதகத்தை எடுத்துக் கொள்ளாமல் தவற விடக்கூடாது”

- Advertisement -

“எனவே அக்சர், ஜடேஜா ஆகியோரை பயன்படுத்துவதில் துணை நுணுக்கங்கள் இருக்கிறது. மிட்சேல் சான்ட்னர், ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணியில் இதே வேலையை செய்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான திறமையை கொண்டிருப்பதால் 8 ஓவர்களை வீசுவதற்காக சேர்ந்தார் போல் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கும். ஆனால் ஒரே மாதிரியான திறமையை கொண்டிருந்தாலும் வெவ்வேறு பவுலர்களான அவர்கள் வெவ்வேறு விதத்தில் வீசுவார்கள்”

இதையும் படிங்க: இந்தியரான இவரை விடக்கூடாது.. பாக் ரசிகரை அடிக்க சென்ற ஹரிஷ் ரவூப்.. தடுத்த மனைவி.. நடந்தது என்ன?

“எனவே பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டிருப்பது ஜடேஜாவை பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதிக்கிறது. சரியான சூழ்நிலைகளில் ஜடேஜா எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவராக இருப்பார். அதை பல வருடங்களாக பார்த்துள்ளோம். மேலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இடது கை பவுலர்கள் பந்து வீசக்கூடாது என்ற எழுதப்படாத விதியை நான் வெறுக்கிறேன். எனவே அதை தள்ளி வைத்து விட்டு இந்தியா தொடர்ந்து வந்த 2 வீரர்களை பயன்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -