இந்தியரான இவரை விடக்கூடாது.. பாக் ரசிகரை அடிக்க சென்ற ஹரிஷ் ரவூப்.. தடுத்த மனைவி.. நடந்தது என்ன?

Haris Rauf
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் சுற்றுடன் வீட்டுக்கு கிளம்பியது. ஏனெனில் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சொதப்பிய பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் அவமான தோல்வியை பெற்றது. அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்கள் எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.

அதன் காரணமாக கனடா ற்றும் அயர்லாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வென்றும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது. இந்த தோல்விக்கு கேப்டன் பாபர் அசாம் சாஹின் அப்ரடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதன் காரணமாக பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

- Advertisement -

தப்பிய ரசிகர்:
குறிப்பாக பயிற்சியாளர்களை மட்டும் வைத்து விட்டு மற்ற அனைத்து வீரர்களையும் நீக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். இன்னும் சில வீரர்கள் சுற்றுலாவுக்காக இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவூப், பாபர் அசாம், அசாம் கான் உள்ளிட்ட சிலர் மட்டும் சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் ஒரு ரசிகரை ஹரிஷ் ரவூப் அடிக்க செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஹரிஷ் ரவூப் தன்னுடைய மனைவியுடன் ஹோட்டல் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அப்போது சில ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அதை ஏற்காததால் பாகிஸ்தான் ஜெர்ஸியை அணிந்திருந்த ஒரு ரசிகர் ஏதோ சொன்னதாக தெரிகிறது. அதற்கு “எப்படி நீ என்னுடைய அப்பாவை திட்டலாம். நீ இந்தியராகத் தான் இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே ஹரிஷ் ரவூப் அந்த ரசிகரை அடிக்க வேகமாக ஓடுகிறார். அதை அவருடைய மனைவி முடிந்தளவுக்கு தடுத்து பார்க்கிறார்.

இதையும் படிங்க: 6 நாளில் 3 மேட்ச்.. பரபரப்பில் எங்க பசங்க வித்யாசத்தை ஏற்படுத்துவாங்க.. கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

ஆனாலும் கட்டுக்கடங்காத அவர் அந்த ரசிகரை அடிப்பதற்கு ஓடுகிறார். அப்போது அங்கிருந்த காவலர்கள் கைகலப்பு ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். இறுதியில் அந்த ரசிகர் “நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான். எங்களை இப்படி தான் நடத்துவீர்களா?” என்று சொல்வதுடன் அந்த 54 வினாடி வீடியோ முடிகிறது. அந்த இடத்தில் தவறு யார் மீது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் என்ன இருந்தாலும் ரசிகரை அடிக்க ஹரிஷ் ரவூப் சென்றிருக்கக் கூடாது என்று மற்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Advertisement