என்ன நடந்தாலும் இவரை சி.எஸ்.கே அணியிலிருந்து தூக்க முடியாது – கோச் பிளமிங் உறுதி

Fleming
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளன. முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வி பெற்ற நிலையில் அதற்கு அடுத்த 2 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோற்ற சென்னை அணி அதற்கடுத்த இரண்டு போட்டிகளில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணியை மிக எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

csk vs rr

- Advertisement -

இருப்பினும் அந்த அணியில் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் தாகூர் சரியான பார்மில் இல்லாதது குறித்து அந்த அணி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் போட்டியில் விளையாடிய தாகூர் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார். அதற்கு அடுத்த 2 போட்டிகளிலும் ரன்களை மட்டுமே கொடுத்து வருகிறார் மற்றபடி எந்த ஒரு விக்கெட்டையும் கைப்பற்றாமல் அனைவரையும் ஏமாற்றி வருகிறார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல தீபக் சாஹர் மீது முதல் போட்டியில் எழுந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட சாஹர் அதற்கு அடுத்து போட்டியிலேயே மிக அற்புதமாக விளையாடிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன்னுடைய திறமையை நிரூபித்தார். ஆனால் தாகூர் மட்டும் விக்கெட் எடுக்காமல் மறுபடியும் சொதப்பி கொண்டு வருகிறார்.

இருப்பினும் தாகூர் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். அணிக்கு பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை அளிக்கக் கூடியவராவார். எனவே இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக நிச்சயமாக அவர் விளையாடுவார் என ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Thakur-1

கண்டிப்பாக அவர் தனது திறமையை மறுபடியும் நிரூபிப்பார் என்கிற அடிப்படையில் அவருக்கு இன்னொரு வாய்ப்பை ஸ்டீபன் பிளமிங் மற்றும் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றைய போட்டியில் வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement