ஐபிஎல் தொடரில் இந்த வருடம் சற்று வித்தியாசமான பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் துவங்கியதும் முதல் அடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரத்தமும் சதையுமாக இருந்த துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா வெளியேறினார்.
தற்போது வரை அவருக்கான இடம் யாராலும் நிரப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர் சென்ற பின்னர் படுமோசமாக செயல்பாட்டை காட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சி.எஸ்.கே ரசிகர்கள் அணியின் மீது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றது என்றே கூறலாம்.
எப்போதும் இல்லாத வகையில் முதல் போட்டியில் வெற்றி பெற்று விட்டு அடுத்த மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு அந்த அணியின் பேட்டிங் தான் காரணம் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு மற்றும் பாப் டு பிளேஸிஸ் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி வருகின்றனர். அணியில் மிடில் ஆர்டரில் கேதர் ஜாதவ் பெரிதாக நினைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்.
குறிப்பிட்ட இரு வீரர்களை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் இதன் காரணமாக அணியும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜாதவ் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பேட்டிங்கை வெளிக்காட்டவே இல்லை இதனால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு ஒரு புதிய நல்ல வீரரை இறக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். ஆனால் இது குறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது…
அணியில் கேதர் ஜாதவ் இரண்டு வேலைகளைச் செய்யப் போகிறார். ஒருவேளை அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்துவிட்டால் நான்காவது வீரராக களமிறங்கி விக்கெட்டுகளை நிறுத்துவார். அதே நேரத்தில் அணி நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் 6 ஆவது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடுவார். இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கவே முடியாது என்பதுபோல் பேசியிருக்கிறார் ஸ்டீபன் பிளமிங்.