சி.எஸ்.கே அணியை காப்பாத்த ஒருவர் கிடைச்சிட்டார். அடுத்த வருஷ ஸ்டார் இவர்தான் – பிளமிங் நம்பிக்கை

Fleming
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து வெகு சீக்கிரம் வெளியேறி விட்டது. தற்போது வரை விளையாடி உள்ள அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி இந்த அணிதான். அதே நேரத்தில் எட்டு முறை இறுதிப் போட்டிக்குச் சென்று மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இப்படிப்பட்ட வெற்றிகரமான அணியாக இருந்து வந்த சென்னை அணி இந்த முறை புள்ளிபட்டியலில் 7 ஆம் இடத்தோடு பிளேஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத வயதான வீரர்களை வைத்து விளையாடியது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது என பல காரணங்கள் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் இந்த வருட ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் களம் இறக்கப்பட்டார். அவர் உண்மையில் துவக்க வீரர் ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக கருதப்பட்டதால் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக துவக்க வீரராக இரக்கப்பட்டு தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ruturaj 1

தொடர்ந்து இரண்டு அரை சதங்கள் அடித்து சென்னை அணியில் தனது இடத்தை பதிவு செய்து கொண்டார். இது குறித்து பேசி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் : ருதுராஜ் கடந்த சில போட்டிகளில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Ruturaj-3

அவர் கொரோனாவார் இந்த தொடரின் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது தொடரிலிருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தொடர்ந்து என்று அதிலிருந்து மீண்டு வந்து தன்னை நிரூபித்திருக்கிறார். அவரது திறமையும் நிரூபிக்கப்பட்டதால் எங்களுக்கு மகிழ்ச்சி சென்னை அணிக்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டீபன் பிளமிங்.

Advertisement