முதல் 6 ஓவரிலேயே சி.எஸ்.கே அணி தோற்றுவிட்டது. ஏன் இப்படி சொல்றாரு தெரியுமா ? – பிளமிங் கொடுத்த விளக்கம்

Fleming
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

- Advertisement -

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் : பவர் ப்ளே ஓவர்கள் மிகவும் மோசமாக அமைந்தது. இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம் என்பது உண்மைதான். விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம் பவர் பிளேவிலேயே எங்களது தோல்வி உறுதியானது. இந்த போட்டியில் இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால் அது சரி இல்லாமல் போய்விட்டது.

Dhoni-1

இன்னும் கொஞ்சம் ரன் அடித்து இருந்தால் பலமான பவுலிங்கை வைத்து வெற்றி பெற முயற்சித்திருக்கலாம் என்று கூறியிருந்தார். மேலும் ஆடுகளம் அவ்வப்போது மாறும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இம்ரான் தாகிர் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே கெய்க்வாட்டிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மோசமான பேட்டிங் அனைத்தையும் மோசமாகி விட்டது என பிளமிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement