நாங்க நெனச்சது வேற..நடந்தது வேற..மொத்தத்துல நாங்க ரொம்ப ஹேப்பி – சி.எஸ்.கே கோச் பிளமிங் மகிழ்ச்சி

Fleming

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோகமான ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு ரொம்ப மோசமாக விளையாடி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் அனைவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சிக்கு உள்ளாகியது மட்டும் அல்லாமல் அந்த அணி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றியது. இந்த ஆண்டு எப்படியாவது நன்றாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் வண்ணம் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே கூறியது.

kkr

ஆனால் இந்தத் தொடரில் அதனுடைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொதப்பும் என்ற கேள்வியை பொய்யாக்கும் வண்ணம் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சென்னைஅணி அசத்தியுள்ளது. 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அமர்க்களமாக வீழ்த்தியது.

பஞ்சாப் நிர்ணயித்த இலக்கை 15.4 ஓவரில் எட்டி மிக அபாரமாக வெற்றி பெற்றது. அதற்கடுத்து 3வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதற்கு அடுத்த நான்காவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றதை குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் : சென்ற ஆண்டு நாங்கள் நிறைய பாடங்களை கற்றோம். அதை எல்லாம் தவிடு பொடியாக்கும் வண்ணம் இந்த ஆண்டு பெரிய அளவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக இருந்தது. முதல் ஐந்து போட்டிகளில் எப்படியாவது 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுடைய இலக்காக இருந்தது.

- Advertisement -

csk vs rr

ஆனால் நாங்கள் நிர்ணயித்ததை விட சிறப்பாக முதல் நான்கு போட்டிகளிலேயே மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது மிக சந்தோசமாக இருக்கிறது. இதை அப்படியே இந்த தொடர் முழுவதும் தொடர முயற்சிப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்டீபன் பிளமிங். சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றதை அதனுடைய ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.