இவர் இருக்கும் வரை சென்னை அணியை யாராலும் தோற்கடிக்க முடியாது – பிளமிங் அதிரடி பேட்டி

Fleming
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. மூன்று முறை கோப்பையை வென்றதால் இந்த முறை ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடுவதில் மிகப்பெரிய விஷப் பரீட்சையாக தான் அமையும். மேலும் ஒவ்வொரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் இந்த முறை பல வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

Chahar

- Advertisement -

ஏனெனில் இந்த ஐபிஎல் தொடருடன் தோனி விடை பெறுவார் என்றே தெரிகிறது. அதனைத் தாண்டி இந்த வருடம் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற மிகப் பெரிய வீரர்கள் அந்த அணியில் இல்லை குறிப்பாக சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க கடந்த பத்து வருடங்களாக இருந்து வந்தார். அவர் இல்லாதது தோனிக்கு ஒரு கைய இல்லாததை போன்றே இருக்கும்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இது குறித்து பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்…

Fleming

தோனி இன்னும் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச வீரரை போன்று தான் இருக்கிறார். மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் போல் ஒரு மிகப் பெரிய வீரராக இருக்கிறார். அவருடன் அனுபவ வீரர்கள் பலர் பக்கபலமாக இருப்பார்கள். தங்களுடைய அனுபவங்களை பயன்படுத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவார்கள். இதனால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரும் மதிப்பு வாய்ந்த வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள் .

Dhoni

பல நேரங்களில் ஆட்டத்தின் இறுதி வரை தூக்கி கொண்டு சென்று போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்கு முக்கிய காரணம் அவர்கள்தான் இவர்களுடன் துடிப்பான இளைஞர்கள் இணையும்போது அணி இன்னும் வலிமையாக மாறிவிடும் என்று தெரிவித்திருக்கிறார் மேலும் தோனி இருக்கும்வரை சென்னை அணி பலமாகவே இருக்கும் என ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

Advertisement