சாம் கரனை ஓப்பனராக களமிறக்கும் அதிரடி முடிவை நாங்கள் எடுக்க இதுவே காரணம் – சி.எஸ்.கே கோச் வெளிப்படை

Fleming

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 13 ஆவது ஐபிஎல் சீசன் பாதி தொடரைக் கடந்து விட்டது. அனைத்து அணிகளுமே தற்போது முதல்கட்ட போட்டிகளை முடித்துவிட்டு இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி முதல் கட்டத்தின் முடிவில் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை குவித்து 5 தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டத்திற்கு வந்த சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்துள்ளது.

CSK-1

இதனால் பிளே ஆப் வாய்ப்பை தற்போதும் சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது என்றே கூறலாம். இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 3 வெற்றிகளை குவித்து 6 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றமாக துவக்க வீரராக சாம் கரனை இறக்கி அனைவருக்கும் சிஎஸ்கே அணி சர்ப்ரைஸ் கொடுத்தது.

அவரும் தான் இறங்கிய முதல் போட்டியிலேயே அணிக்காக மிக முக்கிய பங்களிப்பை அளித்தார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஏனெனில் டூபிளெஸ்ஸிஸ் டக் அவுட் ஆகி வெளியேற சாம் கரன் 21 பந்துகளில் 31 ரன்களை அடித்து அசத்தினார். அதிலும் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் என தனது ஹிட்டிங் பவரை இந்த போட்டியிலும் மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.

curran

எனவே இனிவரும் போட்டிகளிலும் அவர் துவக்கத்தில் இறங்கி அதிரடியாக ஆடும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த போட்டியில் அவரை ஏன் துவக்க வீரராக களம் இறக்கினோம் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சாம் கரன் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பல இன்னிங்ஸ்களில் முன்கூட்டியே இறக்க நினைத்தோம். ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் பல போட்டிகளில் அவரை முன்கூட்டி இறக்க முடியவில்லை.

- Advertisement -

Curran

மேலும் அணியில் பல பேட்டிங் ஆப்ஷன்கள் இருப்பதும் அணிக்கு சிக்கல்தான் எனவே இந்த சிக்கலை போக்குவதற்காகவே நாங்கள் சாம் கரனை துவக்கத்தில் இறக்கிவிட்டு ஆரம்பத்திலேயே அதிரடியான ஒரு துவக்கத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த போட்டியில் அவரை ஓப்பனராக இறக்கினோம் என்று பிளமிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.