
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றில் காணாத அளவுக்கு 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் லக்னோவுக்கு எதிரான போட்டியில் வென்ற சென்னை அடுத்ததாக மும்பையை எதிர்கொள்கிறது.
இங்கிருந்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு சென்னை அணியில் விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி போன்ற காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் வென்று சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை அடுத்த 2 போட்டிகளில் தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் அணியில் உள்ள சீனியர் வீரர்களை மொத்தமாக கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஏனெனில் வருங்காலத்தை நோக்கிய பயணத்தில் இளம் அணியை உருவாக்கி இப்போதே ஆதி எடுத்து வைப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி பிளெமிங் பேசியது பின்வருமாறு. “இது மென்மையான கட்டம் அல்லவா?இப்போதும் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பை நூலிலையில் கொண்டுள்ளோம். இது சில வீரர்களுக்கு நீளமான வாய்ப்புகளை வழங்கி வெற்றிகளை கண்டறிய வேண்டிய சூழ்நிலையாகும். அதே சமயம் நாங்கள் அதிக பொறுமையுடன் இருப்பதற்கான நேரத்தை இழந்து விட்டோம்”
“மற்றபடி நாங்கள் தொடர்ந்து மாற்றங்களை செய்ய விரும்பாமல் ஒரே மேஜிக் ஃபார்முலாவை பின்பற்றி வெற்றி பெற முயற்சிப்போம். நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வழியில் கண் வைத்துள்ளோம். அதே சமயம் அடுத்த சில போட்டிகள் நன்றாக செல்லவில்லையெனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இத்தொடரின் இரண்டாவது பகுதியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும்”
இதையும் படிங்க: ஜான்டி ரோட்ஸ், கிளென் பிலிப்ஸ் எல்லாம் கிடையாது.. அந்த சி.எஸ்.கே வீரர் தான் உலகின் சிறந்த பீல்டர் – ஆஷிஷ் நெஹ்ரா
“எங்களது அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்தக் காலங்களில் எங்களுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அனுபவமிக்க வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும் எங்களுடைய கலாச்சாரமாக இருக்கிறது. இப்போதும் தொடரின் இரண்டாவது பகுதியில் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் திடமான நம்பிக்கையுடன் சிஎஸ்கே இருக்கிறது” என்று கூறினார்.