IPL 2023 : ஹிட்மேனுக்கு பவர் போய் பல வருஷம் ஆச்சு, 2017 முதலே திணறும் ரோஹித் சர்மா – மும்பை ரசிகர்களே கடுப்பாகும் புள்ளிவிவரம்

Rohit Sharma
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் அந்த அணிக்கு சமீப காலங்களாகவே கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடாமல் இருப்பது பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடி ஹிட்மேன் என்று ரசிகர்களால் பெயர் பெற்ற அவர் கடந்த சீசனில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

Mumbai Indians Rohit Sharma MI

- Advertisement -

அதனால் வரலாற்றிலேயே முதல் 6 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த முதல் அணியாக மோசமான சாதனை படைத்த மும்பை புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் சமீப காலங்களாக இந்தியாவுக்காகவும் சர்வதேச அளவில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வரும் அவர் அதற்காக சந்தித்த விமர்சனங்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே அரை சதமடித்த அவர் எஞ்சிய 14 போட்டிகளில் சுமாராக செயல்பட்டு 332 ரன்களை வெறும் 20.75 என்ற மோசமான சராசரியிலும் 132.80 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து முன்னேறாத செயல்பாடுகளையே வெளிப்படுத்தினார்.

பல வருசம் ஆச்சு:
போதாகுறைக்கு பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் மும்பை லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் கிரீன் போன்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் கடப்பாரை பேட்டிங்கை பயன்படுத்தி 2வது பகுதியில் சிறப்பாக செயல்பட்டு 4வது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தளவுக்கு அசத்தியதே பாராட்டுக்குரியதாகும். அந்த வகையில் கடந்த வருடம் புள்ளி பட்டியல் கடைசி இடத்தை பிடித்ததிலிருந்து மீண்டெழுந்து இம்முறை பிளே ஆஃப் வரை மும்பையை அழைத்து வந்த ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டும் அந்த அணி ரசிகர்கள் அடுத்த வருடம் பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு கம்பேக் கொடுப்பார் என்று நம்புகின்றனர்.

Rohit Sharma

இந்நிலையில் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் தரத்தை 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்து மதிப்பிடுவது வழக்கமாகும். அதே போல அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 30க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை வைத்து எளிதாக ஒரு பேட்ஸ்மேனின் செயல்பாடுகளை மதிப்பிடலாம். அந்த அளவுகோல் அடிப்படையில் பார்க்கும் போது போன வருடம் இந்த வருடம் மட்டுமல்ல கடந்த 7 வருடங்களாக ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் திணறலாக செயல்பட்டு வருவது தெளிவாகிறது.

- Advertisement -

அதாவது கடைசியாக 2016 சீசனில் 489 ரன்களை 44.45 என்ற நல்ல சராசரியில் எடுத்த ரோஹித் சர்மா அதன் பின் 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023 என அடுத்த 7 சீசன்களில் தொடர்ச்சியாக முறையே 333, 286, 405, 332, 381, 268, 332 ரன்களை முறையே 23.78, 28.92, 27.66, 29.30, 19.14, 20.75 என்ற 30க்கும் குறைவான சராசரியில் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டுள்ளார்.

அதை விட மிரட்டலாக சிக்சர்களை பறக்க விட்டு அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டிருப்பதால் ஹிட்மேன் என்று கொண்டாடப்படும் அவர் 2015 சீசன் தவிர்த்து 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023 சீசன்களில் முறையே 114.92, 133.77, 125.25, 126.60, 131.54, 129.13, 121.13, 133.02, 128.57, 127.69, 127.42, 120.18, 132.80 என தொடர்ந்து 135க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ரன்களை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:WTC : இறுதிப்போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் – நல்ல காரணம் தான்

இதிலிருந்து சராசரியாக 2017 முதலே கடந்த 7 வருடங்களாக 135க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டிலும் 30க்கும் குறைவான சராசரியிலும் அவர் பேட்டிங் செய்வது தெரிகிறது. மேலும் இந்த சீசனில் 3 முறை டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பரிதாப சாதனையும் படைத்தார். அதனால் சமீப காலங்களாகவே கேப்டனாக இல்லையெனில் ரோகித் சர்மாவுக்கு விளையாடும் 11 பேர் மும்பை அணியில் கூட வாய்ப்பு கிடைக்காது என்று ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்தனர். அதை உண்மையாக்கும் வகையில் இந்த புள்ளி விவரம் இருப்பது மும்பை ரசிகர்களையே கடுப்பாக வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement