WTC : இறுதிப்போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் – நல்ல காரணம் தான்

Ruturaj Gaikwad
Advertisement

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறயிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடயிருக்கிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

IND vs AUS

இந்த இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்கள் முதற்கட்டமாக இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வரும் வேளையில் ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு சில வீரர்கள் இங்கிலாந்து பயணிக்க இருந்தனர். இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் ஸ்டான்ட் பை வீரராக சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாடும் இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஜூன் 3-4 ஆகிய தேதிகளில் ருதுராஜ் கெய்க்வாட் தனது திருமண ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்துள்ளார்.

ruturaj

இதன் காரணமாக புது மாப்பிள்ளை ருதுராஜ் தனது திருமணத்தை முன்வைத்து இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ -யிடம் இந்த தொடரில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கும் விதமாக வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட பி.சி.சி.ஐ அவருக்கு இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து விடுப்பு வழங்கியுள்ளது.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்திருந்தாலும் அவர் இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை சேர்ந்த பல இளம்வீரர்கள் தொடர்ச்சியாக தங்களது திருமணத்தை நடத்தி வரும் வேளையில் ருதுராஜ் கெய்க்வாடும் திருமணம் செய்யவுள்ள இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : CSK vs GT : அவர ஃபைனலில் தூக்கிட்டா கப் சென்னைக்கு தான், குஜராத் வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின் – ஆதரவு யாருக்கு?

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 564 ரன்களை குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 92 ரன்களையும், 4 அரைசதங்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement